Last Updated : 10 Aug, 2018 09:22 AM

 

Published : 10 Aug 2018 09:22 AM
Last Updated : 10 Aug 2018 09:22 AM

வீணை கதைஞர் கீதா பென்னட்டின் கடைசிக் குரல்

தமிழ் வாசகர்களும், இசைப் பிரியர்களும் மிகவும் அறிந்த பெயர் கீதா பென்னட். அடிப்படையில் வீணை இசைக் கலைஞரான இவர் நல்ல எழுத்தாளர். நல்ல வாய்ப்பாட்டுக்காரர். 40 ஆண்டுகளாக அமெரிக் காவில் வசித்துவந்த இவ ரது அகவெளிச் சார்ந்த சிறு கதைகளில் மனிதம் வெளிப் படும்.

கடந்த சில ஆண்டுகளா கவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கீதா பென்னட் நோயின் தாக்குதல் அதிகமாகி கடந்த 6-ம் தேதி (திங்கள்கிழமை) கலிபோர்னி யாவில் காலமானார். 67 வயதாகும் கீதா, சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் மகள். பென்னட் எனும் வெளிநாட்டவரை காதல்மணம் புரிந்த இவருக்கு ஆனந்த் ராமசந்திரன் என்கிற மகன் உள்ளார்.

உலகமெங்கும் வீணை கச்சேரி செய்து பெரும்புகழ் பெற்றிருந்த கீதாவுக்கு வீணையும் பேனாவும் இரு கண்களாகவே இருந்தன. அமெரிக்காவில் இசைப் பயிற்சி அளித்து வந்த இவர் தமிழில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

கீதா பென்னட்டின் ‘வேலைக்குப் போகும் மரு மகள்’ என்ற சிறுகதை இலக் கிய சிந்தனை விருது பெற் றுள்ளது. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள் ளன. இவரது ‘ஆதார சுருதி’ என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழில் இருந்து கன்னடத் தில் மொழிபயர்க்கப்பட்டு உள்ளது.

அண்மையில் தமிழகத் தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் தனது சிறுகதைக்கு கீதா பென்னட்டிடம் மதிப் புரைக் கேட்டு இ-மெயில் அனுப்பியவர், அதில் இப்படி எழுதியிருந்தார்:

‘‘திருக்கடவூர் கால சம் ஹார மூர்த்தி சன்னதியில் மிருத்யுஞ்சய மகா மந்திரம் சொல்லி தங்களுடைய பெயருக்கு அர்ச்சனை செய் யப்பட்டது. பிரசாதம் எங் களுக்கு இரண்டொரு நாளில் வரும். அதை அமெரிக் காவுக்கு அனுப்ப இயலுமா என்று பார்க்கிறேன். முன்பு அமெரிக்க வாசகர் ஒருவருக்கு விபூதி பிரசாதம் அனுப்பி வைக்க எண்ணியபோது, அமெரிக்காவில் அதற்குத் தடை என்று கேள்விப்பட்டேன்’’ என்று எழுதியிருந்தார்.

அதற்கு ‘‘சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. என் மீதான அன்பால் உருவான அந்த பிரசாதத்தை உங்கள் பூஜை அறையிலேயே வைத் திருங்கள். உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற விருப்பமும், நான் புற்று நோயை எதிர்த்து போராட தற் போது ஒரு காரணமாக அமைந்துவிட்டது!’’ என்று பதிலளித்த கீதா பென்னட், இ-மெயிலில் தனது குரல் பதிவை அனுப்பி வைத்திருந் தார்.

கீதா பென்னட்டின் குரலில் பதிவான மொழி உணர்த்தும் செய்தி உருக்கமானது:

‘‘எழுத்தாளர் சகோதர ருக்கு ரொம்ப நன்றி. எனக்கு உடம்பு ரொம்பவும் மோசமாக போயிட்டுருக்கு. என்னைத் தொடர்புகொண்டு, உங்க கதை யைக் கொடுத்து மதிப்புரை கேட்டது எனக்கு சந்தோஷமாக இருக்கு. உடனடியா என் னால எழுதிக் கொடுக்க முடி யலை. கம்ப்யூட்டர்கிட்டேயே என்னால போக முடியலை. உங்க கதை எனக்கு நல்லா பிடிச் சிருந்தது. இப்பதான் அதுக்கு என் மதிப்புரையை எழுத முடிஞ்சது. அது கிடைத்தவுடன் நீங்க பதில் அனுப்பியதுக்கும் ரொம்ப தேங்க்ஸ். என்னால் இப்பல்லாம் மூச்சுவிட முடி யலை. ரொம்ப இரைக்குது. டாக்டர்லாம் இனிமே ஒண் ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எனது நாட் கள் எண்ணப்படுவது எனக் குத் தெரிஞ்சுப் போயிட்டு பிர தர். ஆனா சின்ன சின்னதா என்னால முடிஞ்ச வேலை களை செய்திட்டுதான் இருக் கேன். இதுவாவது நம்மளால முடியுதேன்னு நினைச்சிக்க வேண்டியதுதான். உங்க சிறுகதை தொகுப்பு வந்தவுடன் நான் இருந்தேன்னா எனக்கு அனுப்புங்க. நான் அதைப் பார்க்கிறேன். ரொம்ப நன்றி!’’

கீதா பென்னட் இப்போது இல்லை என்கிற வருத்தம் மிகுந்த செய்தி இசையுலகுக் கும் எழுத்துலகுக்கும் பேரி ழப்புதான்.

இலைகளின் பச்சையம் மாதிரி அவரது சிறுகதைகளில் அவர் வாழ்வார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x