இஸ்லாமிய வெறுப்பின் பின்னணி

இஸ்லாமிய வெறுப்பின் பின்னணி
Updated on
1 min read

இஸ்லாமிய வெறுப்பு என்கிற சொல்லாடல் முன்னைக் காட்டிலும் இப்போது மிகப் பரவலாக சமூகத்தில் இருக்கிறது. ‘அச்சம் என்பது நல்ல விலைக்குப்போகும் சரக்கு’ என்கிறார் நாதன் லீன். இந்த அச்சம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைத் தனது ஆய்வில் முன்வைக்கிறார். “அமெரிக்கா, ஐரோப்பா என உலகெங்கும் அடித்துச்செல்லும் இஸ்லாமிய வெறுப்பின் பேரலை, இயற்கையாக நிகழும் ஒன்றல்ல. இது இஸ்லாமிய வெறுப்பு ஊழியர்களால் உருவாக்கப்பட்டது” என்கிறார் நாதன் லீன். இஸ்லாமிய வெறுப்புத் தொழில் உருவாக்கும் அச்சத்தின் பிடியில் மக்கள் கூட்டங்கள் நிற்கின்றன. இந்த நூலில், நன்கு திட்டமிட்ட அச்ச வணிகத்தை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்ந்து குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுவதற்குப் பின்னால் இழைக்கப்படும் அநீதியை எதிர்கொள்ள இந்த நூல் உதவும்.

இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

நாதன் லீன்

அடையாளம் பதிப்பகம்

புத்தாநத்தம், திருச்சி - 621310.

விலை: ரூ.330

 04332-273444

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in