

அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளை, நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை, காமராஜர் அரங்கத்தில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஆய்வாளர் வ.கீதாவுக்கு வாழ்நாள் சாதனையைப் பாராட்டி விருது வழங்கப்படுகிறது. இதில், சந்துரு மாயவன் தொகுத்துள்ள 'ஒளிரும் சொற்கள்' (தொகுக்கப்படாத ராஜ்கௌதமன் எழுத்துக்கள்) நூலை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளியிட, சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை தலைவர் பேராசிரியர் கோ.பழனி பெற்றுக்கொள்கிறார்.
இயக்குநர் பா.இரஞ்சித், எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், ஸ்டாலின் ராஜாங்கம், ப்ரேமா ரேவதி, சீ.சிவா, வ.கீதா, ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் உமா கஸ்தூரி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.