

மறைந்த ‘அய்யப்பனும் கோஷியும்’ இயக்குநர் சச்சி, சினிமாவாக்குவதற்காகத் தேர்வு செய்து வைத்திருந்த நாவல் இது. 'விலாயத் புத்தா' என்பது உயர்தர சந்தன மரத்துக்கான பெயர். ஜப்பான் மற்றும் ஷாங்காயில் புத்தர் சிலைகள் செய்யப் பயன்படுத்தப்படும் சந்தன மரம் அது. அம்மரத்தை பாஸ்கரன் வாத்தியார் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.
அதை அவர் வளர்ப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அவருடைய முன்னாள் மாணவனும் கடத்தல்காரனுமான டபுள் மோகனன் அதை எப்படியாவது வெட்டிக் கடத்த நினைக்கிறான். இவர்கள் இருவருக்கும் இடையிலான போராட்டத்தின் இடையே அந்தப் பகுதியில் நடக்கும் அரசியல், சமூக பிரச்சினைகளை பேசுகிறது இந்நாவல்.