வானப்பிரஸ்தம்எம்.டி.வாசுதேவ நாயர்அகநி வெளியீடுவிலை: ரூ.120, தொடர்புக்கு: 9842637637.ஞானபீட விருதுபெற்ற மலையாள நாவலாசிரியர், எம்.டி.வாசுதேவநாயரின் குறுநாவல். ஒரு மலைப்பயணத்தை நேரில் அனுபவிக்கும் உணர்வோடு, மனித உறவுகளின் மகத்தான தருணங்களை, அதன் மேன்மைகளைப் பறைசாற்றி நிற்கிறது.சிறப்பின் சிகரம் தமிழகம்கோவை சுந்தரம்மணிமேகலைப் பிரசுரம்விலை: ரூ.120, தொடர்புக்கு: 9789562575.இந்நூலில் தமிழக மூவேந்தர்கள், வாண்டாயத்தேவன், தீரன் சின்னமலை போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், அஞ்சலையம்மாள், முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட சமூக சேவைபுரிந்த பெண்மணிகள் ஆகியோர் பற்றியும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பழமைவாய்ந்த கோயில்கள் பற்றியும் சிறுசிறு வரலாறுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. .நம்பிக்கை நமதே!முனைவர் சுந்தர ஆவுடையப்பன்குமரன் பதிப்பகம்விலை: ரூ.200, தொடர்புக்கு: 044-24353742.சுவையான பேச்சுத்திறத்தால் கல்விநிலையங்கள், இலக்கிய விழாக்கள் என வலம் வரும் சுந்தர ஆவுடைப்பன் எழுதிய நூல். அவருக்கே உண்டான பாணியில் சிறுசிறு கதைகள் சொல்லி நம் அன்றாட சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலான கட்டுரைகளின் தொகுப்பு.தேசபக்தியும் தேவிபாரதியும்யாழினி ஆறுமுகம்சுடர் புக்ஸ்விலை: ரூ.120, தொடர்புக்கு: 8778837936.தேவிபாரதியின் நொய்யல் நாவல், தேசபக்தி, சுந்தரி அக்கா கடை, கீழடி என தான் படித்த, பார்த்த, உணர்ந்த, புரிந்துகொண்டவற்றை சிறு, சிறு கட்டுரைகளாகத் தந்துள்ளார் யாழினி ஆறுமுகம். 29 தலைப்புகளில் விறுவிறு நடையிலான இந்நூலை வேகமாகப் படித்து ரசிக்கலாம். .அயனியூட்டுத் தம்புரான் தோற்றப் பாடல்கள்அழகுமித்ரன்சாய் கம்யூனிகேசன்ஸ்விலை: ரூ.120, தொடர்புக்கு: 9367521424.காணிக்காரர்கள் எனப்படும் பழங்குடியினரின் பாடல்களைத் தொகுத்துள்ளார் வனத்துறை ஊழியரான அழகுமித்ரன். குமரி மாவட்ட முன்னோடி வரலாற்று, நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் அணிந்துரை வழங்கியுள்ளார். 'தம்புரான் வழிபாடு' உரிய வரலாறுகளுடன் விளக்கப்பட்டுள்ள இந்நூலில், குமரி மாவட்ட மேற்குமலைகளின் யானைத்தடங்கள் மிகுந்த காட்டுவழிப் பாதையில் வழிபாட்டிடங்களை தேடிச்சென்ற நூலாசிரியர் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.