

அந்தக் காலம் முதல் அறிவியல் வளர்ச்சியடைந்த இந்தக் காலம் வரை பறவைகள் நமக்கு வியப்பை அளித்துக் கொண்டேதான் இருக்கின்றன. பறவைகளால் எப்படிப் பறக்க முடிகிறது, ஏன் மனிதர்களால் பறக்க முடியவில்லை என்கிற கேள்வி கேட்காத சிறார்களே இருக்க முடியாது.
இன்று 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன. சில பறவைகள் மிக உயரமாகப் பறக்கின்றன. சில பறவைகள் தாழ்வாகப் பறக்கின்றன. சில பறவைகள் சிறு விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன. சில பறவைகள் புழு, பூச்சிகளை உண்கின்றன. சில பறவைகள் வேகமாகப் பறக்கின்றன.