தேவகிராமம் அளிக்கம்பை சமூக வரலாறுஜோசெப் அலைக்ஸ்பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்விலை: ரூ.120, தொடர்புக்கு: 9962214491.இலங்கையில் உள்ள தன் சொந்த ஊரைப்பற்றி நேரில் கண்டறிந்த தகவல்களை, சென்னையில் பயிலும் ஆய்வு மாணவரான ஜோசெப் அலைக்ஸ் தொகுத்து அளித்துள்ளார். கிராம மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், தொழில், கல்வி போன்றவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது. எண்ணங்கள்... வண்ணங்கள்...நீல பத்மநாபன்வானதி பதிப்பகம்விலை: ரூ.250, தொடர்புக்கு: 044-24342810.முதுபெரும் தமிழ் எழுத்தாளர் நாவலாசிரியர் நீல பத்மநாபனின் நீண்ட வாழ்க்கைப் பாதையை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் பற்றி கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கியமான பலரின் கட்டுரைகள், ஆய்வுகள், அதனுடன் நீல பத்மநாபனின் பேட்டிகள், விமர்சனங்கள் ஆகியன பல்வேறு புகைப்படங்களுடன் தரப்பட்டுள்ளன. பிம்பிலிக்பா.சரவணகாந்த்கதவு வெளியீடுவிலை: ரூ.90, தொடர்புக்கு: 94431 84050.மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், திரைப்பட கதையம்சங்கள், வரலாற்றைக் கொண்டாடுதல், வரலாற்று நாவல்களை கொண்டாடுதல், வரலாற்று நாவல்கள் திரைப்படமானதைக் கொண்டாடுதல், நடிகனைக்கொண்டாடுதல் போன்ற மனநிலைகளை நவீனத்துவ, முற்போக்கு சிந்தனைகளுடன் அலசும் சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களின் தொகுப்பு. அஸ்வகோஷரின் புத்த சரிதம்ராஜி ரகுநாதன்சுவாசம் பதிப்பகம்விலை: ரூ.330, தொடர்புக்கு: 8148066645.காளிதாசருக்கும் முற்பட்ட மகாகவியென அறியப்பட்ட அஸ்வகோஷர் இயற்றிய புத்த காவியத்தின் தமிழ் மொழியாக்கம். சமஸ்கிருதஸ்லோகங்களில் இயற்றப்பட்ட இக்காவியத்தை முதல் 14 அத்தியாயங்கள் அழகான கதையோட்டமாகவும், இரண்டாம் 14 அத்தியாயங்கள் ஞானம் பெற்றதிலிருந்து பரிநிர்வாணம் அடைந்தது வரையிலான விளக்கங்களை அழகிய உரைநடையாகவும் தந்துள்ளார் ராஜி ரகுநாதன்..எளிமை, இனிமை, நேர்மை தோழர் ஆர்.நல்லகண்ணுஞா.சிவகாமிமணிமேகலைப் பிரசுரம்விலை: ரூ.90, தொடர்புக்கு: 24342926.மக்கள் போராளியான ஆர்.நல்லகண்ணு, இயற்கையை நேசிப்பவராக, சமத்துவ சிந்தனைகளை ஆதரிப்பவராக, ஒடுக்கப்பட்டோருக்கு உற்றவராகத் திகழும் அவரது ஆளுமைப் பண்புகளை, அவரது வாழ்வின் சம்பவங்களுடன் விளக்கும் நூல்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் (கட்டுரைகள்)ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்Shakespeare's Deskவிலை: ரூ.400தொடர்புக்கு : 9080551905.கடந்து வந்த பாதைகளை நூலாகத் தொகுத்துள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ். எழுத்துத் துறைக்கு வந்ததைப் பற்றிய முன்னுரையே நூலின் நகைச்சுவைத் தன்மையை அறிமுகப்படுத்திவிடுகிறது. ஊர்ப்புராணம், வசிப்பிடம், ரயில்வே ஸ்டேஷன், ஐந்து திரையரங்கங்கள் உள்ளிட்ட கட்டுரைகள் வாசகர் மனம் கவரத்தக்கவையாக உள்ளன.