காந்தியும் சுற்றுச்சூழலும்ப.திருமலைமண், மக்கள், மனிதம் வெளியீடுவிலை:ரூ.130, தொடர்புக்கு: 98656 28989.மகாத்மா காந்தியின் சிந்தனைகள், மையம் கொண்டுள்ள நூல். காந்தியின் சுற்றுச்சூழல், காந்தியின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம், காந்தியின் மதச்சார்பின்மை என்று மூன்று பிரிவுகளாக வகுத்து, அதன்கீழே பல்வேறு தலைப்புகளில் அவரது கொள்கைகள் விளக்கப்பட்டுள்ளன.அவள் அவளாகசு.த.குறளினி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விலை:ரூ.90, தொடர்புக்கு: 044-26251968.கல்லூரி மாணவி சு.த.குறளினியின் 4வது நூல். வாழ்வியல் யதார்த்தக் கதைகள் அடங்கிய தொகுப்பு. சக பிராணிகள் மீது நேசம், தோழமைகளின் புரிந்துணர்வு, பருவப் பிரச்சினைகள் மீதான புரிதல்கள், குற்றங்களை எதிர்த்தல் என குறளினியின் சிறுகதைப் பக்கங்கள் புதிய நம்பிக்கைகளைத் தருகின்றன..திருமூலர்அரங்க. இராமலிங்கம்சாகித்ய அகாதமி, விலை: ரூ.100தொடர்புக்கு: 044-24311741.இந்திய தத்துவ மரபோடு, சித்தர் வழியில் தமிழ் மெய்ஞ்ஞானப் பாதையை உருவாக்கிய திருமூலரைப் பற்றிய நூல். திருமூலர் வரலாறு, சைவ நெறி, யோக நெறி உள்ளிட்ட 11 அத்தியாயங்களில் பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் எழுதிய இந்நூலை, 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.கவிதைப் பூஞ்சோலைஉதயை மு.அழகிரிசாமிநன்னூல் பதிப்பகம், விலை: ரூ.600, தொடர்புக்கு: 9943624956.கவிதைகளின் வடிவம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டேயிருக்கும் இக்காலத்தில், பழமையான வடிவத்தை மறக்காமல் கவிஞர் மு.அழகிரிசாமி எழுதியுள்ள மரபிசைப் பாக்களின் தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ள எளிய பாடல்களை, குழந்தைகள் பாடி மகிழலாம்..அறிந்ததினின்றும் விடுதலைஜே.கிருஷ்ணமூர்த்திநர்மதா பதிப்பகம், விலை: ரூ.190, தொடர்புக்கு: 24334397.மனிதனின் அன்றாட வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது என்பதுதான் ஜே.கிருஷ்ண மூர்த்தியின் அடிப்படை கேள்வி. எதிர்பார்ப்புகள், பேராசைகள், அதிகாரம் செலுத்த விழையும் மனம், எதைக் கண்டும் அச்சம், இன்ப நாட்டம், சாதி, சமயம் என வன்முறைகளுக்குக் காரணமாகும் பலவற்றிலிருந்தும் மனிதன் வெளியே வரவேண்டும் என்கிறது இந்நூல்.