வாழையூர் குணாசிறுகதைகள்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்விலை ரூ.160தொடர்புக்கு: 044-26251968.பல்வேறு விஷயங்கள் குறித்து ஆசிரியர் எழுதியுள்ள 18 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்சண் தவராஜாஇனிய நந்தவனம் பதிப்பகம்விலை ரூ.200தொடர்புக்கு: 9443284823.சுவிட்சர்லாந்தில் இருந்துகொண்டு நீண்ட காலமாக எழுதி வரும் 12 எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் விதமாகத் தொகுக்கப்பட்டுள்ள நூல் இது..ஏஐ எனும் நான்ஹரி பிரவின்சந்தியா பதிப்பகம்விலை ரூ.130தொடர்புக்கு: 98409 52919.ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆரம்பம், எதிர்கால பயணம், அதனால் ஏற்படும் வேலைவாய்ப்பு மாற்றங்கள், அதன் இருண்ட பக்கங்கள் உள்ளிட்ட விஷயங்களை பேசும் நூல் இது.விதிமுறைகளற்ற ஆட்டங்கள்கவியோவியத் தமிழன்பி4புக்ஸ் வெளியீடுவிலை ரூ.230தொடர்புக்கு: 9042461472.கிராமத்து கதைமாந்தர்களை உயிர் சித்திரங்களாகக் கொண்டு புனையப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு..கடவுள்களின் அடிமைகள்கேத்ரின் மேயோதமிழாக்கம்: சமரன்பரிவாதினி பதிப்பகம்விலை ரூ.180தொடர்புக்கு: 9092559307.‘இந்திய தாய்’ எனும் ஆங்கில நூல் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய கேத்ரின் மேயோவின் இரண்டாவது நூலின் தமிழாக்கம் இது. இந்துக்களின் மத நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் பற்றி இந்நூல் பேசுகிறது.