

‘மக்கள் கவிஞர்’ எனப் போற்றப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மறைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், மக்கள் மனதில் தனது கவிதைகள், பாடல்கள் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை பாட்டுக்களாக வடித்த கல்யாணசுந்தரம், வெறும் 29 ஆண்டுகள் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்தவர்.
எனினும், உழைக்கும் மக்களின் உரிமைக் குரல்களாக ஒலித்த அவரது திரையிசைப் பாடல்கள், காலங்கள் பல கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிராற்றலைப் பெற்றிருக்கின்றன. இத்தகையச் சிறப்புமிக்க மக்கள் கவிஞரின் புகழ்பாடும் ஏராளமான நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. எனினும் கவிதை வடிவில் மக்கள் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி புதுமை படைத்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் கவிஞர் ஜீவி.
பட்டுக்கோட்டை தமிழின் பாட்டுக்கோட்டை
கவிஞர் ஜீவி
இந்து தமிழ் திசை
விலை: 150
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562
மாணவர் பதிப்பாக கடலுக்கு அப்பால் நாவல்: இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வெளியான, ப.சிங்காரம் எழுதிய ‘கடலுக்கு அப்பால்’, ‘புயலிலே ஒரு தோணி’ ஆகிய நாவல்கள் இரண்டுமே தமிழ் வாசகப் பரப்பை வெகுவாகக் கவர்ந்தவை. இப்போது சில கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் ‘கடலுக்கு அப்பால்’ நாவல் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சீர் வாசகர் வட்டம் சார்பில் ‘கடலுக்கு அப்பால்’ நாவல் மாணவர் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 176 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ.50 எனக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இந்த மாணவர் பதிப்பு நூல் 5000 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளதாக சீர் வாசகர் வட்டம் தெரிவித்துள்ளது.
கடலுக்கு அப்பால்
ப.சிங்காரம்
சீர் வாசகர் வட்டம்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 8220171108
ஓவியர் நடேஷ் முத்துசாமி நினைவு நாடக விழா | திண்ணை: கூத்துப்பட்டறை சார்பில் மறைந்த ஓவியர் நடேஷ் முத்துசாமி நினைவாக, ‘விழிப்பு’ (Awakening) நாடக விழா, அக்டோபர் 4, 5 மற்றும் 10,11,12 ஆகிய நாட்களில் மாலை 7 மணிக்கு விருகம்பாக்கம் கூத்துப்பட்டறை அரங்கில் நடைபெற உள்ளது. நாடகம் நடைபெறும் நாட்களில் திரைப்பட இயக்குநர் ஞான ராஜசேகரன், நாடக செயற்பாட்டாளர் மற்றும் இயக்குநர் வெளி ரங்கராஜன், பேராசிரியர் கவித்ரன் கண்ணன், நாடக இயக்குநர் பிரவீண் கண்ணனூர் (மேஜிக் லேண்டர்ன்), நாடக செயற்பாட்டாளர் பிரளயன் (சென்னைக் கலைக்குழு) ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.