

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திரைப்பட விருது வழங்கும் விழா, இன்று (28-09-2025, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் சென்னை சாலிகிராமம், தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுவெளியில் நடைபெறுகிறது. தமுஎகச தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், திரைப்பட இயக்குநர்கள் மாரி செல்வராஜ் (வாழை), பாரி இளவழகன் (ஜமா), தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து), எம்.மணிகண்டன் (கடைசி விவசாயி), எஸ்.வினோத்ராஜ் (கூழாங்கல்), தமிழ் (டாணாக்காரன்), சை.கௌதம்ராஜ் (கழுவேத்தி மூக்கன்), ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்), தயாரிப்பாளர்கள் திரைக்கலைஞர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் (கூழாங்கல்), ஜெயந்தி அம்பேத்குமார் (கழுவேத்தி மூக்கன்) உள்ளிட்டோர் விருது பெறுகின்றனர். தமுஎகச மாநில துணைத்தலைவர்கள் சிகரம் ச.செந்தில்நாதன், மயிலை பாலு, பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் ஏகாதசி, திரைக்கலைஞர் ரோகிணி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
கி.ரா. விருது 2025: சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தின் 2025ஆம் ஆண்டுக்கான ‘கி.ரா. விருது' வழங்கும் விழா இன்று (28-09-2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை பீளமேடு, பூ.சா.கோ. பொறியியல் கல்லூரி 'டி' அரங்கத்தில் நடைபெறுகிறது. ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கூடிய இந்த விருது எழுத்தாளர் சு.வேணுகோபாலுக்கு வழங்கப்படுகிறது.