

ரஷ்ய சிறுகதைகள், பெரும்பாலும் போர்க்கதைகளின் மொழிபெயர்ப்பு இந்நூல். இத்தொகுப்பில் அலெக்ஸி டால்ஸ்டாயின் ‘ருஷ்ய கதாபாத்திரம்’ கதையை குறிப்பிட்டுச் சொல்லலாம். இச்சிறுகதை போரின் வலியை, வாழ்வின் இழப்பை, தாயின் தவிப்பை நம்முள் கடத்தி விடுகிறது.
எகோர், இளைஞன். ராணுவ லெப்டினென்ட்டாக டாங்கி பிரிவில் பணியாற்றுபவன். போரில் அவனுக்கு நேர்ந்த பாதிப்பு நம் நெஞ்சை உலுக்குகிறது. ஒருநாள், எதிரிகள் அடிவாங்கி, புறமுதுகிட்டு ஓடும்போது, டாங்கிமீது தாக்குதலை நிகழ்த்திவிட்டு ஓடுகின்றனர். குண்டுவீச்சில் டாங்கி எரிகிறது. டாங்கி டிரைவர், லெப்டினென்ட்டை காப்பாற்றுகிறான். ஆனால் உடலில் தீக்காயங்கள்... முகமே மாறிவிடுகிறது.