

கடந்த 1996 கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக பணியாற்றியவர் ரகுமான்கான். இவர், சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காலத்தில் சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகள் இந்நூலில் தொகுத்துத் தரப்படுள்ளன. இந்நூலைப் புரட்டியதும் நம் கவனத்தை ஈர்ப்பவை, பேரவை நாள், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட விவாதம் ஆகியவை காலவரிசையில் தரப்பட்டுள்ள விவரங்கள், எந்த நாளில் எந்த விவாதம் என்ற விவரத்திற்கு நேரடியாக செல்வதற்கு உதவியாக உள்ளன.
மேலும், சட்டப்பேரவை நடைமுறைகளை அறிந்துகொள்ள இந்த நூல் வழிகாட்டியாக இருக்கிறது. சபாநாயகர் குறுக்கீடுகள், முதல்வர், அமைச்சர்கள், பிற உறுப்பினர்கள் குறுக்கீடுகள் போன்றவையும் ரகுமான்கான் உரையின் இடையிடையே இடம்பெற்றுள்ளன.