முல்லைவனம் (சிறுகதைகள்)ஆர்.சாந்திசாந்தி பப்ளிகேஷன்ஸ்விலை: ரூ. 150தொடர்புக்கு: 9842422933.நூலாசிரியை தான் அருகில் பார்த்த மனிதர்களின் கதைகளை இதில் தொகுத்திருக்கிறார். ஒரு சின்ன நேசத்தால் மனித உறவுகளை சரிசெய்துவிட முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் கதைகள்.உக்ரைன் போர்க்களம்!மனசாட்சி மண்ணுக்குள் புதைந்த பூமிஜெகாதாஎஸ் பப்ளிகேஷன்ஸ்விலை: ரூ. 300தொடர்புக்கு : 8015827644.உக்ரைன் போர் வரலாறு, சின்னச் சின்னக் கட்டுரைகளாக எளிய மொழியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. போர்க்களத்தின் அதிரவைக்கும் பக்கங்களை, பல்வேறு தரவுகளுடன், அரிய படங்களுடன் அறிமுகப்படுத்தும் நூல்..நிலவின் முதுகுதவத்துரை செல்வன்நீர்க்கண்ணாடி வெளியீடுவிலை: ரூ. 110தொடர்புக்கு: 9894826131.ஹைக்கூ, சென்ரியூ போன்ற இன்னொரு புதிய வருகையான தன்முனைக் கவிதைகளின் தொகுப்பு. சின்னச் சின்ன சொற்களில் எழுதப்பட்ட இக்கவிதைகள் காதலை பாதம் நோகாமல் ஏந்திச் செல்கின்றன.பேரன்பில் இணைவோம்கன்யூட்ராஜ்வானவில் புத்தகாலயம்விலை ரூ. 499தொடர்புக்கு : 26860070.வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க, மதவேறுபாடின்றி யாத்திரை செல்பவர்களிடையே வெளிப்படும் மனிதநேயம் பற்றி பேசும் நாவல்.