ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் | திண்ணை
2024ஆம் ஆண்டுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன. பரிசீலைக்கான நூல்கள் பற்றிய பரிந்துரைகள் மின்னஞ்சல் மூலமாக கேட்கப்பட்டன. இந்த வகையில் எழுத்தாளருக்கான நூல்கள் அனுப்பும் செலவு தவிர்க்கப்பட்டது. நாடகம், நாவல், சிறுகதை, கவிதை என தனித்தனி பிரிவுகளில் நடுவர்கள் குழு அமைக்கப்பட்டது.
நாடகத்திற்கான விருதுக்கு, எழுத்தாளர் வே.எழிலரசு எழுதிய ‘முத்தமிழும் மூன்று கொலைகளும்’ என்ற நூலும், நாவல்களிலிருந்து எழுத்தாளர் சித்ரா சிவன் எழுதிய ‘அத்தினி’யும், சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர் அனுராதா ஆனந்த் எழுதிய ‘மயிற்பீலி’ தொகுப்பும், கவிதை தொகுப்புகளிலிருந்து, சீனு ராமசாமி எழுதிய,‘மாசி வீதியின் கல்சந்துகள்’ தொகுப்பும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. விருதுகள் வழங்கும் விழா பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் கூறியுள்ளர்.
