

இன்று மனிதர்கள் தங்களின் அறிவாற்றலாலும் அறிவியல் தொழில்நுட்ப உதவியோடும் ஏராளமான கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறிய வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் அவற்றுக்கும் விடை தெரியவரலாம்.
பெருவெடிப்பிலிருந்து உருவாகிய பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து, அணுக்கள் உருவாகி, வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் அணுக்கரு இணைவு நடந்து, நட்சத்திரங்கள் பிறந்தன. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஈர்ப்பு விசையால் ஒன்றிணைந்து, விண்மீன் திரள்களையும் பால்வெளி மண்டலத்தையும் உருவாக்கின.