

மணற்கேணி ஆய்விதழ் சார்பில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல், நிகரி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகள் பெற, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறைத் தலைவர், பேராசிரியர் ய.மணிகண்டன், விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கொடூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் மு.ஏழுமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பும், பட்டயமும் கொண்ட நிகரி விருது, விழுப்புரத்தில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படும்.