கிறிஸ்துவின் சாயல்தமிழில்: சேவியர்சந்தியா பதிப்பகம்விலை: ரூ.390தொடர்புக்கு : 9840952919.பைபிளுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் வாசிக்கப்படும் கிறிஸ்தவ நூல், தாமஸ் எ கெம்பிஸ் எழுதிய ‘இமிடேஷன் ஆஃப் கிறிஸ்து’ என்று கூறப்படுகிறது. இந்நூல் 95-க்கும்மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ‘கிறிஸ்துவின் சாயல்’ என்ற பெயரில் இந்நூலை மொழி பெயர்த்துள்ளனர்.அறிவியலாளரின் அமெரிக்கப் பயணம்நா.சு.சிதம்பரம்நெல்லி பதிப்பகம்விலை: ரூ.1400தொடர்புக்கு : 9840221753.ஆசிரியரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள் பற்றிய கட்டுரைகள், அழகழகான ஒளிப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன..உலக வரலாற்றில்வி.ஜி.சந்தோசம்கோ.பெரியண்ணன்வனிதா பதிப்பகம்விலை: ரூ.160தொடர்புக்கு: 9884441941.தொழிலதிபர் வி.ஜி.சந்தோசத்தின் வாழ்க்கைக் கதையையும், விஜிபி குழுமம் உருவான கதையையும் பேசுகிறது இந்நூல்.அங்காயா வம்சம்கண்மணிஇளா வெளியீட்டகம்விலை: ரூ.350தொடர்புக்கு: 9499041024.அங்கம்மா என்ற பெண், சமூகத்தை எதிர்கொண்டு குழந்தைகளைப் போராடி வளர்க்கும் கதையை கொண்ட நாவல்..எனது முகவரிகள்முனைவர் இரா.காளீஸ்வரன்மாற்று ஊடக மையம்விலை: ரூ.100 தொடர்புக்கு: 9094799688.புராணக் கதைகளை, சமூக நடப்புகளைக் கதைகளாக, கதைப் பாடல்களாகப் பாடிவரும் 13 நாட்டுபுறக் கலைஞர்களின் கதைகளை, அவர்களோடு வாழ்ந்துபெற்ற அனுபவத்தையே கதைகளாக்கியுள்ளார் முனைவர் இரா.காளீஸ்வரன். கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ள இத்தகைய நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கைத் தரம் சிறிதளவேனும் மேம்பட ஏதாவது செய்ய வேண்டு மென்கிற உந்துதலை உண்டாக்குவதே இந்நூல் ஆற்றுகிற ஆக்கப்பூர்வமான வினையாகும்.