

மகாத்மா ஜோதிபாய் ஃபூலே - சாவித்திரிபாய் ஃபூலே தம்பதியின் இலக்கியப் படைப்புகள் அனைத்தும் ஒரே புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தம்பதியின் அறிவுசார் படைப்புகள் அனை வரையும் சென்றுசேரும் வகையில் நாக்பூரில் உள்ள ‘மகாத்மா ஜோதிபாய் ஃபூலே ஆராய்ச்சி - பயிற்சி நிறுவனம்’ இந்தப் பணியைச் செய்திருக்கிறது.
ஃபூலே தம்பதியின் படைப்புகளைப் பல்வேறு பதிப்பகங்கள் தனித் தனியாகப் பதிப்பித்துள்ள நிலையில் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்ததோடு, அனைத்து வடிவங்களிலும் இருக்கிற படைப்பு களையும் இந்தப் புத்தகத்தில் தற்போது தொகுத்திருக்கிறார்கள்.