

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சென்னைப் புத்தகப் பூங்கா அரங்கில், செப்டம்பர் 2ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்புச் சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், ‘தொன்மை மறவேல்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டுக் கருத்தரங்கம்: சாகித்திய அகாடமியும், மதுரை கருமாத்தூர்,அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து நடத்தும் ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டுக் கருத்தரங்கம் செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அருள் ஆனந்தர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில், ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் பற்றி, பல்வேறு தலைப்புகளில் ஆறு அமர்வுகளில் உரையாடல்கள், விவாதங்கள் நடைபெறவுள்ளன.