

போர் கால ரணத்தை, அகதிகளாக வெளியேறிய அவலத்தைப் பேசுகிற ஈழத்துப் படைப்புகள், பெரும் தாக்கத்தை இப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஈழம், நமக்கும் நெருக்கம் என்பதால் அந்தப் படைப்புகளில் ரத்தமும் சதையுமாக நம்மையே பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.
ஆனால், ஸ்பெயினில் 1938-ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இசபெல் அயந்தேவின் ‘கடலின் நீண்ட இதழ்’ நாவலும் அதே உணர்வைத் தருவது இன்னும் ஆச்சரியம். மனிதர்கள் வேறு வேறென்றாலும் உணர்வுகள் ஒன்று என்பதற்கான அடையாளம் இது.