

உறவுகளின் வலைப்பின்னலில் சிக்கிக்கொள்ளும் மனிதன் ஒரு கட்டத்தில் உறவுகளை நிர்வகிக்கவும் செய்கிறான்; அதையும் உடைத்து, அவனையும் இழுத்துக்கொண்டு வேறு எங்கோ பாய்ந்து செல்லும் அனுபவங்களின் பின்னலாக ‘பால்ய நதி’ நாவல் உருப்பெற்றிருக்கிறது.
சி.மோகன் தனது புனைவு வெளியை உருவாக்குவதற்கு முன்பாக, அதற்குத் தகுந்த கேன்வாஸை தயார் செய்வதில்தான் ஒட்டுமொத்த வாழ்வின் பயணமே அடங்கியிருக்கிறது என்று நம்புகிறார். மிகத் தாமதமாக புனைவின் திசைநோக்கி வந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.