கவிமணியின் பன்முகத்திறன்முனைவர் பி.யோகீசுவரன்நீலா படிப்பகம்விலை: ரூ.275தொடர்புக்கு: 94456 18541.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பன்முகத் திறனையும் கருத்தோட்டத்தையும் காட்டும் பல்வேறு கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது.அன்னமிட்ட கைகள்இரா.சதீஷ் சங்கர்புழுதி பதிப்பகம்விலை: ரூ.200தொடர்புக்கு: 96000 35808.ஓட்டல் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கடசுப்புவின் நேர்காணலின் வழியே, தமிழ்நாட்டில் உணவகத் தொழிலின் வளர்ச்சி, அதன் மேலாண்மை, அதன் எதிர்காலம் குறித்த புரிதலை வழங்கும் புத்தகம்..திரையிலும் உதித்த சூரியன்குமரன் தாஸ்கருப்புப் பிரதிகள்விலை: ரூ.280தொடர்புக்கு: 9444272500.கருணாநிதி எழுதிய திரைப்படங்களில் அவருடைய சமூக அரசியல் கண்ணோட்டம் வெளிப்பட்ட விதம் குறித்த 12 கட்டுரைகளைக் கொண்டது இந்நூல்.நடிகர்களும்நாற்காலிக் கனவுகளும்ஆர்.ராதாகிருஷ்ணன்சுவாசம்விலை: ரூ.210தொடர்புக்கு: 8148066645.தமிழக அரசியலோடு தொடக்கக் காலம் தொட்டே இருந்து வரும் திரையுலகத் தொடர்பு குறித்தும் இன்றைய திரைப் பிரபலங்களின் அரசியல் பங்களிப்பு குறித்தும் விவரிக்கும் புத்தகம் இது..பள்ளிக்கூடம் போகலாமா...பி.கே. பெரிய மகாலிங்கம்புஸ்தகா பதிப்பகம்விலை: ரூ.210தொடர்புக்கு: 7418555884பள்ளிக்கூட பின்னணியில் உருவான நாவல் இது. ‘கதையின் நாயகி கற்பனைப் பாத்திரம் அல்ல. எனது 43 ஆண்டு அனுபவத்தில் நான் கண்ட ஆசிரியைகளின் கலவை’ என்று தெரிவிக்கிறார் ஆசிரியர்.