

தற்காலத் தமிழக அரசியல் பரப்பில் அனைவராலும் எளிமையாக அணுகக்கூடிய தலைவர்கள் யார் என்று கேட்டால், ஆர்.நல்ல
கண்ணு, பழ. நெடுமாறன் ஆகியோர்தான் அனைவருக்குமே உடனடியாக நினைவுக்கு வருவார்கள். இருவருமே தமிழ் மக்களின் நலன் காக்கும் பல போராட்டங்களை இணைந்து நடத்தியவர்கள். இந்நிலையில் ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகத்தின் ‘அறவாழ்வின் அடையாளம்' நூலுக்காக ஆர்.நல்லகண்ணு பற்றிய தகவல்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆர்.நல்லகண்ணு மீது உங்களுக்குப் பெரும் மதிப்பு உருவாகக் காரணம் என்ன? - 1980களில் இருந்து நல்லகண்ணுவுடன் பழகி வருகிறேன். அவரது எளிமை, அனைவரிடத்திலும் இனிமையாக பழகுவது போன்றவற்றைப் பார்த்து வியந்திருக்கிறேன். தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களிலேயே அதிக காலம் சிறையில் இருந்தவர்கள் பாலதண்டாயுதமும்,
நல்லகண்ணுவும்தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளின்படி அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை மட்டுமே ஒருவர் மாநிலச் செயலாளராக இருக்க முடியும்.