

‘நினைச்ச வேலை செய்வதற்கு/ எந்நாளும் துணைநின்ற/அரிவாளைக் கேட்டுப்பார்/அறிவின் திறமிருந்தும்/அதிகாரத்தில் முனைமழுங்கும்/அவலத்தைச் சொல்லி அழும்’ - ஒரு மண்வெட்டிக்கோ, கதிர் அரிவாளுக்கோ இருக்கும் மரியாதைகூட அதைக் கையில் ஏந்தும் பட்டியல் சாதித் தொழிலாளருக்குக் கிடைப்பதில்லை என்பதை இந்தக் கவிதை வரிகள் உணர்த்துகின்றன. எழுதியவர் நாட்டுப்புற மக்களிசைக் கலைஞரான கே.ஏ.குணசேகரன்.
பொழுதுபோக்குக்காகவும் இறந்தோருக்கான சடங்குகளில் ஒன்றாகவுமே புழக்கத்தில் இருந்த நாட்டுப்புற இசை, இவரது முன்னெடுப்பில் சமூக சமத்துவத்துக்காகக் களம் கண்டது. சாகித்திய அகாதெமி ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்கிற தலைப்பில் வெளியிடும் நூல் வரிசையில் கே.ஏ.குணசேகரன் பற்றிய நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்