

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன் கவிதைகள் மூலமும் எழுத்துகள் மூலமும் தீரத்துடன் ஈடுபட்டவர் ராம் பிரசாத் பிஸ்மில்.
இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு மாகாணத்தில் ஷாஜகான்பூரில் (தற்போதைய உத்தரப்பிரதேசம்) 1987இல் பிறந்தவர். உருது, இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதிய இவர், மொழிபெயர்ப்பாளரும்கூட.