

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 1920களின் சென்னை மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தன. பிறகு சுயாட்சிக் கட்சி (Swaraj party) வந்தது.
1920, 30, 40-கள் என்பது வாக்காளர் தகுதி பெறுவதற்கும், சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிடவும் கடுமையான வரையறைகள் இருந்த காலம். அப்போது இருந்தது முழுமையான மக்களாட்சி என்று சொல்ல முடியாது. ஜமீன்தாரர்களும், நிலக்கிழார்களும்தான் சட்டமன்ற உறுப்பினர்களாக வர முடிந்தது.