

எனக்கு அப்போதுதான் சட்டென்று அந்த யோசனை தோன்றியது. தவறு செய்த செல்வராசு தண்டனை பெற வேண்டும், அதில் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரம் செல்வராசுவின் மனைவியும் பிள்ளைகளும் பாதிக்கப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தோன்றிய யோசனை அது.
பையினுள் இருந்த வெள்ளைத்தாளையும் பேனாவையும் எடுத்து எழுத ஆரம்பித்தேன். ‘மாண்பமை நீதியரசர் அவர்களுக்கு வணக்கம்.’ தடதட வெனக் கைகால்கள் நடுங்கத் தொடங்கி இருந்தன. எழுத்து அதன் வடிவத்தில் வரவில்லை. “எழுந்து வாங்கம்மா.” மன்றத்தில் இருந்த அத்தனை பேரின் பார்வையும் என்மேல் விழுந்தது.