உயிர் பெற்ற கருணை மனு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, மீண்டுவந்த 26 தமிழர்கள் வரலாற்றை இந்நூல் பேசுகிறது. முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்குத்தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, அவர்கள் அனைவரும் சட்டரீதியான போராட்டங்களின்மூலம் படிப்படியாக விடுவிக்கப்பட்ட சம்பவங்களை பல்வேறு தரவுகளோடு நூல் விவரிக்கிறது.
தூக்குத்தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரிய கருணை மனு, பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த காலங்களில் ஓயாமல் சட்ட நிபுணர்களின் துணையை நாடி, சட்ட ரீதியான நிவாரணம் பெற்ற அத்தனை முயற்சிகளும் இதில் பதிவாகியுள்ளன. படுகொலையும் புனையப்பட்ட வழக்கும், மாபெரும் மக்கள் இயக்கம், பொங்கிப் பெருகிய மாந்தநேயம், ஆணையங்கள் சுட்டிய உண்மைக் குற்றவாளிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் நான்கு பாகங்களாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
