

அரசியல் நூல்கள் தவிர்த்து இ. பா. சிந்தனின் சிறார் நூல்களான அப்பா ஒரு கதை சொல்றீங்களா, கதைச் சொல்லிகளின் கதைகள், பல்வர்சிங் பாலு, இந்தியாவின் கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள் முதலிய நூல்களைத் தொடர்ந்து மற்றொரு நூல், ‘முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள்’ ஆகும்.
மருத்துவம் என்பது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள் மட்டுமே படிக்கவும், வேலை செய்யவும் முடியும் என்கிற எண்ணம் இருந்தது. அத்தகைய சூழலில் பெண்கள் எப்போது மருத்துவத் துறையில் அடியெடுத்து வைத்தார்கள். பெண்கள் அடைந்த சிரமங்கள் என்னென்ன என்பதை அனைவரும் அறிய வேண்டும்.