

முருகன் கொலுசின் ஒலி: குன்றுதோறும் ஆடும் குமரனுக்கு உகந்த விரதங்களில் முதன்மையானது கந்த சஷ்டி விரதம். முருகனின் பெருமை பேசும் நூல்களுள், ஸ்ரீ பால தேவராய சுவாமிகள் அருளிய ‘கந்தர் சஷ்டி கவசம்’ மண் குடிசை முதல் மாளிகை வரை முழக்கமிடப்படுகிறது.
மனதை மாசு தாக்காதவாறு ஒரு கவசமாகத் திகழ்வதால் ‘மனக்கவசம்’ என்று போற்றப்படும் கந்த சஷ்டி கவசத்தை பக்திக் கண்ணோட்டத்தோடும், இலக்கியக் கண்ணோட்டத்தோடும் அலசி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர் இராமநாதன் பழனியப்பன்.