

‘இவரு பெரிய கலெக்டரு’ என்பது தமிழர்களின் விமரிசன பயன்பாடுகளுள் ஒன்று. அந்த அளவுக்கு நம் கனவு பணிவாழ்க்கையாக குடிமைப்பணி நம்முள் ஊறிப்போய் இருக்கிறது. தாம் பெற்ற கல்வியை சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்கிற சமூக அக்கறையும் இந்த கனவுக்கு வலு சேர்க்கும் உந்துசக்தி எனலாம்.
“சமூகத்துக்குச் சேவையாற்றத் தயாராக இருப்பதினால் திறமை வாய்ந்த நபரிடமிருந்து உயர்ந்த மனிதர் வேறுபட்டு நிமிர்ந்து நிற்கிறார்” என்றார் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அப்படிப்பட்ட உயர்ந்த மனிதராகும் பெருங்கனவு பலருக்குள் அவர்களைத் தூங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கும். அவர்களது கனவு நிஜமாக உரிய வழிகாட்டுதல் தேவை.
யூ.பி.எஸ்.சி தேர்வை வென்றவர்கள் (பாகம் - 2)
ஆர். ஷபிமுன்னா
விலை :160/-
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
திண்ணை | ஆரணி புத்தகத் திருவிழா: ஏழாம் ஆண்டு ஆரணி புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களின் மாலை வேளைகளில் சிந்தனைக்கு செறிவூட்டும் சொற்பொழிவுகள் நடைபெறும். இந்த புத்தகக்காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் புத்தகங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.