

தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரித் தமிழ்த் துறையும், காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் சுகுமாரன் படைப்புப் பயணம் என்ற தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் ஜூலை 31ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு கருத்தரங்கம்: சாகித்ய அகாடமி மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டுக் கருத்தரங்கம் சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 28, 29 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் மற்றும் பல்வேறு துறை அறிஞர்கள் பங்கேற்கின்றனர். தொடக்க விழா மற்றும் நிறைவு விழா தவிர, முதல் நாள் மூன்று அமர்வுகள், இரண்டாம் நாள் மூன்று அமர்வுகள் என மொத்தம் நடைபெறும் ஆறு அமர்வுகளில் வெவ்வேறு தலைப்புகளில் அடிகளாரைப் பற்றி உரை நிகழ்த்த உள்ளனர்.