

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் பேச்சு வழக்கு, கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் வகையில் ‘தெலங்கானா அகராதி’ என்கிற திட்டத்தை அம்மாநில சாகித்ய அகாடமி முன்னெடுத் திருக்கிறது. மொழிவாரி மாநிலமாகத் தெலங்கானா இருந்தாலும் அதன் வெவ்வேறு பகுதிகளில் புழங்கும் மொழியின் நடையும் உச்சரிப்பும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன.
இவை அனைத்தையும் ஆவணப் படுத்துவதன் மூலம் பழங்காலப் பேச்சு வழக்கையும் நிகழ்கால வழக்கையும் மக்கள் அறிய முடியும். சொற்கள் சேகரிப்புக்கும் வகைப்படுத்தலுக்கும் மொழியியல் அறிஞர்களின் உதவியோடு அறிவியல் முறைகளைப் பயன்படுத்தவிருப்பதாகத் தெலங்கானா சாகித்ய அகாடமி தெரிவித்திருக்கிறது.