

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் 2025ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சிவகாசி காளீஸ்வரி ஆர்ச்சிட்ஸ் அரங்கில் 20-07-2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. முனைவர் மே.து.ராசுகுமார், பேராசிரியர் வீ.அரசு, திருச்சி லெனின், பால.சிவகடாட்சம், அய்யாறு ச.புகழேந்தி, பேராசிரியர் அ.ராமசாமி, அன்பாதவன், மதிகண்ணன், ஈரோடு சர்மிளா, கன்யூட்ராஜ், மு.ந.புகழேந்தி, முனைவர் லோகமாதேவி, ஆர்.பி.அமுதன், ராம்போ குமார், சந்திரமோகன் உள்ளிட்டோர் விருது பெறுகின்றனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சென்னை மாநகராட்சி இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகிகள் எஸ்.கே.கங்கா, மருத்துவர் த.அறம் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
விண்ணப்பங்கள் வரவேற்பு: கந்தசாமி மாணிக்கம் - பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுக்கான விண்ணப்பப் படிவத்தினை www.tnfindia.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த படிவத்தை தமிழ்நாடு அறக்கட்டளை, எண் 27, டைலர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு 15-09-2025 மாலைக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர் க.இளங்கோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.