

நாடு முழுவதும் சுமார் 450 மாநில பல்கலைக் கழகங்கள், 55 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 4.75 இலட்சம் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவை தவிர நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தனி. மத்திய அரசின் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான காந்தி கிராம பல்கலைக்கழகத்தை சேர்ந்த க.பழனிதுரை என்ற ஒரு பேராசிரியர் வகுப்பறைக்கு வெளியே (சமூகத்திற்கு) செய்த பணிகளின் சுருக்கமே 'வான் திறந்த வெளிச்சம்'
என்னும் நூல்.
இதேபோல் அனைத்து மத்திய மாநில பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள் பணியாற்றியிருந்தால் மலையளவு பணிகள் மக்களுக்குச் சென்று சேர்ந்திருக்குமே! அது பலருக்கு ஏன் சாத்தியமாக வில்லை. பேரா.பழனிதுரைக்கு சாத்தியமானது எப்படி? கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வது, தேவைக்கு ஏற்ப வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது, என இரண்டுக்கும் பேரா.பழனிதுரை முன் உதாரணமாக திகழ்வதை இந்த நூலின் வழியே உணரலாம்.