

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டத்திற்குரிய சவால்களை மனிதன் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறான். புதிது புதிதான கண்டுபிடிப்புகள் தொழிற்புரட்சிக்கு வித்திட்டன. இப்போது தொழில்நுட்பப் புரட்சி உலகம் முழுவதும் நடந்து கொண் டிருக்கிறது. அதன் ஒரு வடிவம்தான் `ஸ்டார்ட்அப்'. ‘
உலக அளவில் யோசி; உள்ளூர் அளவில் செயல்படுத்து’ என்பதுதான் இதன் உள்ளடக்கம். இப்படி யோசித்த 25 தொழில்முனைவர்களின் விரிவான பேட்டிகளின் தொகுப்புதான் `ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி?' என்னும் இந்தப் புத்தகம்.
இந்து தமிழ் திசை நாளிதழின் `வணிக வீதி' பகுதியில் இந்தப் பேட்டிகள் வெளிவந்தபோதே வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தப் பேட்டிகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தற்போது நூலாக வந்துள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்குவது முதல் தொடர்வது வரை அதில் இருக்கும் நுட்பங்கள், சவால்களை மிகவும் நெருக்கமாக சம்பந்தப்பட்டவர்களின் அனுபவ வார்த்தைகளிலேயே சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பு.
ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி
முகம்மது ரியாஸ்
விலை : 180
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562
அந்திமழை நிகழ்வுகள் | திண்ணை: அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025இல் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா மற்றும் அந்திமழை இளங்கோவன் எழுதிய கனவுப்படிக்கட்டுகள் நூல் வெளியீட்டு விழா ஆகிய நிகழ்வுகள் சென்னை கே.கே. நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் 19-07-2025 (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் தமிழகப் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், எழுத்தாளர் இமையம் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.