

கோவையில் செயல்பட்டு வரும் விஜயா வாசகர் வட்டம் சார்பில், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான கே.எஸ். சுப்பிரமணியன் நினைவாக ஆண்டு தோறும் இரண்டு மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதைப் பெறும் இரண்டு படைப்பாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை விஜயா வாசகர் வட்டத்தின் மு.வேலாயுதம் நேற்று வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ‘பெட்ரோ பராமோ’ என்ற நூலுக்காக பொறியியல் கல்லூரி பேராசிரியர் கார்த்திகைப் பாண்டியன் விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.