

சமூகத் தாக்கத்தை நேரடியாக உள்வாங்கிக்கொண்ட இலக்கிய வடிவமாக நாவல் கருதப்படுகிறது. இதன் சமீபத்திய உதாரணம், மு.குலசேகரன் எழுதியுள்ள ‘தங்க நகைப் பாதை’ நாவல். அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது நன்மை, தீமை என இரண்டுமே இருக்கும்.
அரசு இயந்திரங்கள் நன்மையை மட்டுமே என்றும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். படைப்பாளர்கள் ஒருபோதும் அப்படி இருக்க மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர் ஒருவராக இருந்தாலும் அவரது தரப்பைப் பொருட்படுத்துவார்கள். குறிப்பாக நவீன இலக்கியங்கள் உதிரிகளின் பக்கம் நிற்கும். ஒடுக்கப்பட்டவர்களுக்காக அதன் குரல் ஒலிக்கும்.