

இந்த ஆண்டு ‘புனைவுக்கான வுமன்ஸ் பிரைஸ்’ விருது ‘த சேஃப் கீப்’ நாவலுக் காக டச்சு நாவலாசிரியர் யாயெல் வான்தெர் வூடனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாவல் கடந்த ஆண்டு புக்கர் பரிசு குறும்பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ‘வியக்க வைக்கும் முதல் படைப்பு. வரலாறு, மர்மம், வரலாற்று உண்மை ஆகியவற்றின் தலை சிறந்த கலவை’ என நடுவர்களால் பாராட்டப் பட்டிருக்கும் இது, யாயெல்லின் முதல் நாவல். இவர் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இரண்டாம் உலகப் போர் முற்றிலுமாக முடிவடைந்துவிட்ட 1960களில் நெதர்லாந்தின் அமைதி நிறைந்த கிராமப்புறமொன்றில் நடக்கும் கதைதான் ‘த சேஃப்கீப்’. போருக்குப் பிந்தைய நெதர்லாந்தில் தனியாக வசிக்கும் இசபெல்லின் வாழ்க்கையில் அவளுடைய சகோதரனின் காதலி இவா நுழைகிறாள்.