சிறகின்றிப் பற ஞா.தாரிகாஆரோ பதிப்பகம்விலை: ரூ.தொடர்புக்கு: 9080801016.சந்தச் சுவை மிகுந்த நடையில் சமூக, தனி மனிதப் பிரச்சினைகளைக் கவிதையாக எழுதியிருக்கிரார் கவிஞர்.பெரும் துறை கொற்கை கானல்ஹரிகிருஷ்ண தாஸ் நாவிலை: ரூ.200தொடர்புக்கு: 7760665012.பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலத்தைப் பற்றிய வரலாற்று நாவல் இது. முத்துவேல் கோமன் என்னும் கற்பனைக் கதாபாத்திரத்தைச் சுற்றி எழுதப்பட்டுள்ளது..சாமானியத் தலைவர் காமராஜர்சத்யா எண்டெர்பிரைசஸ்ஜெகாதாவிலை: ரூ.150தொடர்புக்கு: 9080529054.காமராஜர் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகளைக் கொண்ட அவரது ஆளுமையை இந்த நூல் துலங்கச் செய்கிறது.இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மைராஜம் கிருஷ்ணன்ஸ்ரீ செண்பகா பதிப்பகம்விலை: ரூ.150தொடர்புக்கு: 044 24331510.பெண்மையைக் குறித்து புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூலின் மறுபதிப்பு இது..வெயிலின் நியதிஎஸ்.காமராஜ்அறிவுஒளி புத்தகப்பட்டறைவிலை: ரூ.100தொடர்புக்கு:9443544607சமூகக் கருத்தாழம், மனித உணர்வுகள் மிக்கக் கதைகளைக் கரிசல் பின்னணியில் காமராஜ் இந்தத் தொகுப்பில் எழுதியிருக்கிறார். .இயல் விருது அறிவிப்பு - திண்ணை: கனடா இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளர்கள் யுவன் சந்திரசேகருக்கும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சந்திரசேகர், கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு எனப் பல வகைகளில் இலக்கியப் பங்களிப்பு செய்துள்ளார். தமிழ்ப் புனைவில் பரிசோதனைகளைச் செய்துபார்த்தவர் யுவன். அவரது கதைகளில் மனத்தின் புகை மூட்டத்தை உணர முடியும். கதைகளையும் கொத்துகளாக பிடித்துக் காட்டும் ஒரு விநோதத்தன்மையையும் அவர் கைக்கொண்டிருந்தார். சச்சிதானந்தர் சுகிர்தராஜா, சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கட்டுரை எழுத்தாளராக பெரிதும் அறியப்பட்டவர். இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வசித்துவருபவர். லண்டன் பார்மீங்கம் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சுவாரசியமும் புதுமை விருப்பமும் கொண்டவை இவரது எழுத்துகள். .இயல் விருதை ஒட்டி கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் நூல்களுக்கான பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நாவல் பரிசு, ‘பம்பாய் சைக்கிள்’ (காலச்சுவடு பதிப்பகம்) நாவலுக்காக இரவி அருணாசலத்துக்கும், சிறந்த கட்டுரை பரிசு, ‘எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர். நினைவுகள்’ (பி.வி. பதிப்பகம்) நூலுக்காக த. பிச்சாண்டிக்கும், சிறந்த கவிதைத் தொகுப்புக்கான பரிசு, ரவி சுப்பிரமணியன் (‘அருகிருக்கும் தனியன்’ - போதிவனம் பதிப்பகம்), றியாஸா எம் ஸவாஹிர் (‘நிலங்களின் வாசம்’ - வேரல் புக்ஸ் பதிப்பகம்) ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு ‘எழுத்தாளர் தேவகாந்தனின் ‘கனவுச் சிறை’ நூலை ‘Prison of Dreams’ என்கிற பெயரில் மொழிபெயர்த்த நீட்ரா ரொட்ரிகோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.