

புகழ்பெற்ற இந்திய இயக்குநர் மெஹபூப் கானின் ‘மதர் இந்தியா’ திரைப்படம், இன்று (08.06.25) மாலை 5 மணிக்கு சென்னை, வளசரவாக்கம், அன்பு நகர், 4ஆவது தெருவில் உள்ள பாலுமகேந்திரா நூலகத்தில் திரையிடப்படவுள்ளது. தொடர்புக்கு: 9360214560
டிஸ்கவரி புக் பேலஸின் ‘புக் புக்’ - சென்னையை அடுத்த அச்சரப்பாக்கம் 99 கி.மீ. காஃபி உணவக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (10.06.25) அன்று காலை 10 மணிக்கு ‘புக் புக்’ என்கிற பெயரில் கண்டெய்னர் புத்தகக் கடையை டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் தொடங்குகிறது. எழுத்தாளர்கள் வேல ராமமூர்த்தி, பவா செல்லதுரை, நடிகர் சமுத்திரக்கனி, பத்திரிகையாளார் நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.