இலக்கியம்
கயிற்றில் தொங்கும் வாழ்க்கை | நூல் வெளி
தமிழ் வாசிப்பு சூழலில் அறிந்திராத தொழிலான வானுயர் கட்டிடங்களில் கயிறு கட்டித் தொங்கித் தொழில்செய்பவர்களை (Rope Access Technician) மையப்படுத்திய நாவல், நிர்மல் எழுதியிருக்கும் ‘இடுக்கண் படினும்’. வானுயர் கட்டிங்களில், புகைபோக்கிகளில் இருக்கும் மின்சாதனங்களை, வெல்டிங் பகுதிகளைச் சரிபார்க்க கயிற்றின் உதவியுடன் தொங்கிய வண்ணம் பணிசெய்வர்கள் இவர்கள். அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களும், விதிமுறைகளும் கட்டுக்கோப்பானவை.
இந்தப் பணியாளர்களுக்காக, அவர்கள் உபயோகிக்கும் சாதனங்களுக்காக சமர்பிக்கும் சான்றிதழ்களை பணிக்கு அழைக்கும் நிறுவனம் ஒவ்வொரு முறையும் சரிபார்க்கும். ஏதேனும் ஒன்றில் பிசகு அல்லது முறைகேடு நிகழ்ந்தாலும் விபத்தாக முடியும். இந்தப் பணியில் படி நிலைகள் உண்டு. அதன்படி மேற்பார்வையிடும் பதவியில் இருப்பவன் நாயகன் இன்பா.
