

கவிஞர் வெய்யிலின் ‘ஆக்டோபஸின் காதல்’ என்கிற காதல் கவிதைத் தொகுப்பை கதா மலையாளத்தில் அதே பெயரில் மொழிபெயர்த்துள்ளார். கரோனா பொது முடக்கக் காலத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள், காதலின் பிரிவைப் பாடுபவை. தமிழ்ச் செவ்வியல் ஓர்மையுள்ள இந்தக் கவிதைகளில் நவீன தொடர்புச் சாதனங்கள் ஊடகமாகத் தொழிற்பட்டுள்ளன.
கோவில்பட்டி புத்தகக் காட்சி: தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார்-மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் புத்தகக் காட்சி, கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் காந்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 04.06.2025 வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகமும் கலந்துகொண்டுள்ளது. 10 சதவீத தள்ளுபடியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கும். அனுமதி இலவசம். தொடர்புக்கு: 88703 76637