

அம்மாக்களைப் பாடுவது நவீன இலக்கியத்தின் ஒரு அம்சம். சில படைப்புகளில் அம்மா ஒரு திரு உருவாக, ஒரு சங்கல்பமாக இருக்கிறாள். ஆனால், அம்மா குறித்த இந்தப் பொதுக் கற்பிதம் கேள்விக்கு உட்படுத்தக்கூடியதுதான். இந்தப் பின்னணியில் அம்மாவைப் பற்றி கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ரா எழுதிய இந்த நினைவுக் குறிப்புகள் விசேஷமானது.
அம்மாவின் நினைவுக் குறிப்புகள் என்கிற பெயரில் எழுதப்பட்டாலும் இவை எல்லையில்லாச் சுதந்திரத்துடன் எழுதப்பட்டுள்ளன. தனது பால்ய காலம், கிராமம் குறித்துச் சுவாரசியமாக எழுத இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் அவர். அதில் அம்மா ஒரு பங்குதான். ஆனால், ஆதார மையமாக அவளை வசுதேந்த்ரா சுழலச் செய்கிறார். வீட்டுக்கு டிவி வந்த அனுபவத்தில் அந்தக் காலமும் மனித உணர்வுகளும் அவ்வளவு வெள்ளந்தித்தனத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.