ஊரெங்கும் பூவாசம்ப.நரசிம்மன்இனிய நந்தவனம் பதிப்பகம்விலை:ரூ.120தொடர்புக்கு: 9443284823 நவீன கவிதை விட்டொழித்த அலங்காரங்களைச் சூடிக்கொண்ட கவிதைகளின் தொகுப்பு இது. .கடற்மிருகம்ஜோமுதற்கல் சொற்கூடம் பதிப்பகம்விலை:ரூ.125தொடர்புக்கு: 9344307964.கடல் மணம் கமழும் கவிதைகள் இவை. கடற்கரையில் நாள் முழுவதும் நடந்தலைந்த உணர்வைத் தரும் சொற்கள் இவை.உண்மை உறங்கும் நேரம்பொன்சிங்புஸ்தகா பதிப்பகம்விலை:ரூ.140தொடர்புக்கு: 7418555884.சமூக உணர்வுள்ள நவீனக் கவிதைகள் இவை. பல சமூகப் பிரச்சினைகளை கவிதைகள் வழி பேச முயன்றுள்ளார் கவிஞர்..தன்னறம்பொன் சுந்தரராசுயெஸ் யெஸ் புக்ஸ்விலை:ரூ.250தொடர்புக்கு: 9600398660.சிங்கப்பூர் புலம்பெயர்ச் சூழலில் நெருக்கடிக்கு உள்ளாகும் வாழ்க்கைச் சூழலை இந்தக் கதைகள் வழிக் கவனப் படுத்துகிறார் எழுத்தாளர்.சிந்திக்கவைக்கும் சிலப்பதிகாரம்அ.பிச்சைநியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்விலை:ரூ.300தொடர்புக்கு:9080330200.சிலப்பதிகாரத்தின் கருத்துச் செறிவுகள், பண்பாட்டுக் கூறுகளை எடுத்தியம்பும் நூல் இது..ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு விழா | திண்ணை: எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டு விழா சென்னை திநகர் சர் பி.டி. தியாகராயர் அரங்கத்தில் இன்று (10.05.25) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்திய மாதர் சம்மேளனத் தேசியத் தலைவர் ஆனி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பேரா.அரங்கமல்லிகா, பாரதி சந்துரு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசவுள்ளனர். இந்த விழாவில் ஜீவ சுந்தரி எழுதிய ‘போராளி ராஜம் கிருஷ்ணன்: களத்திலும் வாழ்விலும்’ என்ற நூல் வெளியிடப்பட உள்ளது.