

எழுத்தாளர் தமிழவன் தன் படைப்புத் திறனால், சமகால சிறுகதைப் படைப்பாளிகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதை, வாசகர் உணர்ந்துகொள்ளக்கூடிய விதத்தில் வெளி வந்திருக்கிறது, இந்தச் சிறுகதைத் தொகுப்பு. ‘பஸ்’ கதை, தாயின் மரணத்தைத் தந்தி வடிவில் கொண்டு வருகிறது. ஊருக்குப் போக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கையில் மன உணர்வுகள், பல்வேறு சம்பவங்களாக இந்தக் கதையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
கூத்தாடியுடன் குரங்கும் தகர டப்பாவில் குச்சியாலடித்து ஒலி எழுப்பி ஊர்வலம் செல்கிறது, திருமணம் பண்ணாமலிருக்கும் மகன் கதாபாத்திரத்தைப் பற்றிய தாயின் வருத்தம், இப்படிக் காலம் கடந்தும் தொடர்புடையதும் தொடர்பில்லாததுமான பல மன நினைவுகள் துண்டு துண்டாக இந்தக் கதையில் விவரிக்கப்படுகின்றன.