

எழுத்தாளர் சீராளன் ஜெயந்தனின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு ‘அதிகார விநாயகர்’. இதன் பெரும்பான்மையான கதைக்களம் பெண்களை மையமிட்டது. பல கதைகளில் பெண்களே ஆடுபவர்களாகவும் ஆட்டுவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
சமூகத்தில் இன்றளவும் மாறாத சாதிய இருப்பைப் பேசக்கூடிய கதை ‘மொட்டை.’ இக்கதையில் வரும் மகா பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண் என்னும் காரணத்தினால் திருமணமான பிறகு தனது கணவன் முரளி வீட்டில் அன்றாடம் எதிர்கொள்ளும் தீண்டாமைப் பிரச்சினைகள், இறுதியில் மகாவின் தனி அடையாளமாகக் காட்டப்பட்டுவந்த அவளுடைய மயிர் மழிக்கப்படுதல், அதை ஆத்திரம் பொங்க நாத்தனார் முகத்தில் விட்டெறிதல் என நீள்கிறது கதை. அதேபோன்று ‘தொண்டுக்கூலி’ கதை முக்கியமானது.