பச்சையாறு ஓடிக்கொண்டிருக்கிறதுகன்யூட்ராஜ்சந்தியா பதிப்பகம்விலை: ரூ.600தொடர்புக்கு: 044 24896979பட்டியல் இன மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாவல் இது. சமூக ரீதியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை இந்த நாவல் பேசுகிறது..நீர்த்திவலையும் பளிங்குக் கல்லும்வல்சபாரதி பதிப்பகம்விலை: ரூ.50தொடர்புக்கு: 9383982930.பாலு என்கிற சுட்டிச் சிறுவனின் அனுபவங்கள் அழகான கதைகளாக இந்த நூலில் எழுதப்பட்டுள்ளன.வாழும் பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர்முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்திட்டக்குடி செந்தில்திராவிடம் ஃபார் இண்டியா மூவ்மெண்ட் பப்ளிகேஷன்ஸ்விலை: ரூ.555.மு.க.ஸ்டாலின் முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய செயல்பாடுகளை இந்த நூல் விவரிக்கிறது..தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு நிதி | திண்ணை: தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தி.சு.அவினாசிலிங்கத்தால் 1946இல் நிறுவப்பட்ட அமைப்பு தமிழ் வளர்ச்சிக் கழகம். தமிழில் பல்துறை கலைக்களஞ்சியங்களை (Encyclopedia) உருவாக்கும் உயரிய லட்சியத்தைத் தமிழில் நிறைவேற்றிய அமைப்பு இது. 1947இல் திட்டமிடப்பட்டு 1954இலிருது 1968 வரை 10 தொகுதிகளாகக் கலைக்களஞ்சியங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.இப்போது கலைக்களஞ்சியங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு, மாணவர் அகராதி, தமிழியல் களஞ்சியம், தமிழ்ச் சிந்தனைக் களஞ்சியம் போன்ற திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ம.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். இப்பணிகளுக்காக தமிழ்நாடு முதல்வர் 2 கோடி ரூபாய் நிதியை இந்த அமைப்புக்காக ஒதுக்கியுள்ளார். .சிறார் எழுத்தாளர் சுகுமாரன் 75: சிறார் எழுத்தாளர் சுகுமாரன் 75ஆம் ஆண்டை ஒட்டி, ஞாயிற்றுக்கிழமை (20.04.25) மாலை 5 மணிக்கு சென்னை, கே.கே. நகர், டிஸ்கவரி புக் பேலஸில் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய ஜீவா, பிரியசகி, ஞா.கலையரசி, வேடியப்பன், சிராஜுதின் உள்ளிட்டோர் பேசவுள்ளனர். நிகழ்வை டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து ஒருங்கிணைக்கிறது.க.பஞ்சாங்கத்துக்கு விருது: தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒட்டி அறிஞர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. பேராசிரியர் க.பஞ்சாங்கம் சிலம்பொலியார் தமிழறிஞர் விருது வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளார். இந்த விருதை ஆசிரியர் இரா.மோகன்குமார் இவருடன் பகிர்ந்துகொள்கிறார். இருவருக்கும் தலா 50,000 ரூபாய் ரொக்கமும் நினைவுப் பரிசும் வழங்கப்படவுள்ளது. சிலம்பொலியார் மாணவர் விருதுக்கு வீ.வீரபாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது 10,000 ரூபாய் ரொக்கமும் நினைவுப் பரிசையும் உள்ளடக்கியது.