

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தேசிய மாநாட்டில் கட்சிப் பிரதிநிதிகளின் உரையை ஐந்து மொழிகளில் கேட்கும் வகையில் அக்கட்சியின் மொழிபெயர்ப்புக் குழுவினரால் செயலி உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு, ஐ-போன் ஆகிய இரண்டு வகைக்கும் ஏற்ப செயலிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு உரையையும் தனித்தனியாக மொழிபெயர்ப்பதால் ஏற்படும் நேர விரயத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்க மொழி, இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உரைகள் மொழிபெயர்க்கப்பட்டன. மொழிபெயர்ப்பு செய்து பேசுபவர்களுக்கு உதவும் வகையிலும் மொழிபெயர்ப்புச் சுமையைக்குறைக்கவும் மட்டுமே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இருக்கி றார்கள்.